» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடி சென்ற நபர்

வியாழன் 8, நவம்பர் 2018 12:31:57 PM (IST)

நாகர்கோவில் அருகே சினிமாவில் வரும் காமெடி போல வாலிபர் ஒருவர் மோட்டார் பைக்கை ஓட்டிப் பார்த்து வருவதாக சொல்லி திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. 

நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் சுனில்ராஜ் (30). இவர் செட்டிக்குளத்தில் பழைய மோட்டார் பைக்குகளை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு டிப்-டாப் ஆடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். ஒரு பைக் தனக்கு தேவைப்படுவதாக அவர் சுனில்ராஜிடம் தெரிவித்தார். அவரும் உங்களுக்கு தேவையான பைக்கை  தேர்வு செய்து கொள்ளுங்கள் என கூறினார்.பின்னர் அந்த நபர் ரூ.1 லட்சம் மதிப்பிலான புல்லட்டை தேர்வு செய்து அது தனக்கு பிடித்து இருப்பதாகவும், அதனை ஓட்டி பார்க்க விரும்புவதாகவும் அந்த நபர் கூறினார்.

சுனில்ராஜின் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பின்னால் அமர்ந்து கொள்ள செட்டிக்குளத்தில் இருந்து புறப்பட்ட அவர் நேராக பொதுப்பணித்துறை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் பாேடுமாறு கூறினாராம். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர், நீங்கள் பெட்ரோல் எல்லாம் போடத் தேவையில்லை என கூறியுள்ளார். பெட்ரோல் போட்ட அடுத்த நிமிடத்தில் ஊழியரை டிப்-டாப் நபர் பலமாக தாக்கி கீழே தள்ளினார்.இதில் நிலை குலைந்த ஊழியர் சுதாரிப்பதற்குள் அந்த நபர் புல்லட்டுடன் வேகமாக தப்பிச் சென்றார். கீழே விழுந்ததில் காயம் அடைந்த ஊழியர், சுனில்ராஜை சந்தித்து நடந்ததை கூறினார்.

அதிர்ச்சி அடைந்த சுனில்ராஜ், இது குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தநிலையில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று அனாதையாக நின்றது. போலீஸ் விசாரணையில் அந்த மோட்டார்சைக்கிள் நாகர்கோவிலில் டிப்-டாப் நபர் திருடிச் சென்ற மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. போலீசுக்கு பயந்து அவர் மோட்டார்சைக்கிளை விவேகானந்தபுரத்தில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory