» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வியாழன் 8, நவம்பர் 2018 11:01:34 AM (IST)

நாகர்கோவிலில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை  (நவ.9) நடைபெறுகிறது.

இதுகுறித்து, நாகர்கோவில் வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் காளிமுத்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வந்து அவர்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம்.தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory