» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் பட்டாசு வெடித்த 7 பேர் கைது : 23 பேர் மீது வழக்கு

புதன் 7, நவம்பர் 2018 8:36:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள். நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) உட்பட 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory