» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பறக்கை அருகே பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

புதன் 7, நவம்பர் 2018 8:00:10 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அருகே பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பறக்கை அருகே குஞ்சன்விளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (47). கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீபால், மற்றொரு வாலிபர் ஆகிய இரண்டு பேர் சுயம்புலிங்கம் வீட்டின் முன் பட்டாசு கொளுத்தி போட்டுள்ளனர். இதை சுயம்புலிங்கம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். ஏற்கனவே அவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. 

எனவே கோபமடைந்த அந்த வாலிபர்கள் வீரலட்சுமியை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து சுயம்புலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் ஸ்ரீபால் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory