» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 31 வழக்குகள் பதிவு

புதன் 7, நவம்பர் 2018 8:48:31 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த நேரத்தை தவிா்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக 1086 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒன்று, முத்தையாபுரம் காவல்நிலையத்தில் ஒன்று, நாசரேத் காவல் நிலையத்தில் 4, தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒன்று, நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் 3, மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் 2, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 3, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 2, சாத்தான்குளம் 2, கழுகுமலை 2, குலசேகரபட்டினம் 2, திருச்செந்தூர் கோவில் காவல் காவல் நிலையத்தில் ஒன்று,  திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம் 2 மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து

ராஜாNov 8, 2018 - 12:15:51 PM | Posted IP 172.6*****

வழக்குகள் k

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory