» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 11 ஆண்டு சிறை

வெள்ளி 19, அக்டோபர் 2018 11:25:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெம்போஓட்டுனருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குலசேகரம் அருகே உள்ள வண்டிபிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(32). டெம்போ ஓட்டுனர். இவர் இரண்டாண்டுகளுக்கு முன் பக்கத்து ஊரை சேர்ந்த சுமார் 13 வயது சிறுமியை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. து குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மகளிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜாண் ஆர்.டி. சந்தோசம் விஜயகுமாருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory