» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இலவச கண்லென்ஸ் பொருத்தும் முகாம் நடக்கிறது : ஆட்சியர் தகவல்

வியாழன் 18, அக்டோபர் 2018 12:41:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர்.23 ம் தேதி)  தொடங்குகிறது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  அதிநவீன கண் லென்ஸ் பொருத்தும் முகாம், அக். 23  ஆம் தேதி  தக்கலை ஊராட்சி ஒன்றியம் பள்ளியாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,  அக். 24  ஆம் தேதி திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் குலசேககரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,  25  ஆம் தேதி தோவாளை ஒன்றியம் தடிக்காரன்கோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 27  ஆம் தேதி ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,  29 ஆம் தேதி குருந்தன்கோடு ஒன்றியம் நடுவூர்கரை ஆரம்ப சுகாதாரநிலையத்திலும், 30 ஆம் தேதி கிள்ளியூர் ஒன்றியம் கீழ்குளம் சுகாதார நிலையத்திலும் காலை 9  மணி முதல் பிற்பகல்  1  மணி வரை நடைபெறுகிறது. 

இதில் அனைத்து கண்புரை நோயாளிகளுக்கும் இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.  அதற்கு அடுத்த நாளே தங்கள் இல்லங்களுக்கு அரசு வாகனத்திலேயே கொண்டு விடப்படுவர்.   எனவே, கண்புரை நோயாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இந்த நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டு பயனடையலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory