» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் இடி மின்னலுடன் பெய்த கனமழை : அணைப்பகுதிகள் கண்காணிப்பு

வியாழன் 18, அக்டோபர் 2018 12:15:37 PM (IST)

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனியடையே மாவட்டத்தின் அணைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது.

காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory