» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் பழுது நீக்கும் பணி : பயன்பெற அழைப்பு

வெள்ளி 12, அக்டோபர் 2018 1:03:28 PM (IST)

ஊரக பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை அரசு திட்டம் 2018-19-ன்கீழ் பழுது பார்த்தல் பணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 1993-94-க்கு முன்பு வீடுகள் கட்டப்பட்டு தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகளை அரசு திட்டம் 2018-19-ன்கீழ் பழுது நீக்கம் செய்ய தெரிவித்து 100 வீடுகள் ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. 

ஒவ்வொரு வீட்டின் பழுது பார்க்கும் செலவு ரூ.50000 அல்லது பழுது செலவினத்தில் வேலையின் மதிப்பு இதில் எது குறைவோ அத்தொகை பயனாளிக்கு வழங்கப்படும்.  இத்திட்டத்தில் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் கூடிய தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.பயனாளிகள் ஊரக பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 1993-94-க்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிறிய ஃ பெரிய பழுதடைந்த நிலையில் உள்ள வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.  வீடுகள் பழுது பார்க்க இயலாத நிலையில் முழுவதுமாக பழுதடைந்த நிலையில் இருக்கக் கூடாது.     இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி ஏற்கனவே அரசு திட்டத்தின்கீழ் வீடு பெற்ற பயனாளியாக அல்லது பயனாளி உயிருடன் இல்லை எனில் பயனாளியின் வாரிசுதாரராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளி வீடு பழுது பார்த்திடும் பொருட்டு ஏற்கனவே அரசு மானியம் அல்லது இதர அரசு உதவிகள் எதேனும் பெற்றிருக்க கூடாது.இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் பட்டியலை கிராம சபையில் ஒப்புதல் பெறும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் 23.10.2018 அன்று காலை 11 மணிக்கு அந்தந்த கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை நடைபெறவுள்ளது.  இதில் தகுதியுடைய பொது மக்கள் அனைவரும் தவறாது பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory