» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வளர்ச்சிப்பணிகளை கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு

வெள்ளி 12, அக்டோபர் 2018 11:54:58 AM (IST)


கன்னியாகுமரி  மாவட்டம், மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.46.29 இலட்சத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி  மாவட்டம், மணவாளக்குறிச்சி அரசு துவக்கபள்ளி எதிர்புறத்திலிருந்து ஆண்டார்விளை சி.எஸ்.ஐ சர்ச் மற்றும் ஆண்டார்விளை தெருவில் 14-வது நிதித்குழு மானியத்தின் கீழ் ரூ.20. இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கருந்தளம்(தார்ச்சாலை) அமைக்கும் பணியினையும், தட்டான்விளை தர்ம சாஸ்தா கோவில் அருகில்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்(2017-2018); கீழ், ரூ.6. இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி(இ) கடியப்பட்டினம் அரசு துவக்கபள்ளியில் கல்வித்துறை மூலதன மானிய திட்டத்தின் கீழ், ரூ.5.29,  இலட்சம் மதிப்பில் பள்ளி அலுவலகம் மற்றும் வகுப்பறை கட்டிட பரமாரிப்பு பணியினையும், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி  தேசிய உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15, இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கக்கோட்டுத்தலை   ஊராட்சி புதிய அலுவலக கட்டிடப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார், மணவாளக்குறிச்சி(இ), கடியப்பட்டினம் அரசு துவக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டார்.

சத்துணவினை சுத்தமாக குழந்தைகளுக்கு தரமானதாகவும் வழங்க உறுதி செய்திட வேண்டும் என உத்திரவிட்டார்.அதனை தொடர்ந்து மணவாளக்குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் சரியான அளவில் குளோரின் கலந்துள்ளதா என கேட்டறிந்தார்.பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்கவும் அப்பகுதியிலுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை சுத்தமாக வைத்திட  ஆட்சியர் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது ஆட்சியர் உடன் உதவி செயற்பொறியாளர்; (பேரூராட்சிகள்) மாடசாமி சுந்தர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory