» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பயிர்க் காப்பீடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: ஆட்சியர்

வெள்ளி 12, அக்டோபர் 2018 11:10:15 AM (IST)

பயிர்கள் முழுமையாக அழிந்தால்தான் காப்பீடு கிடைக்கும் என்ற தவறான கருத்தை விவசாயிகள் நம்ப வேண்டாம் என மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

குருந்தன்கோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆட்சியர் பிரசாந்த்வடநேரே கூறும்போது. வருவாய் கிராமம் வாரியாக நடத்தப்படும் பயிர் அறுவடை, பரிசோதனை மகசூல், உத்திரவாத மகசூலை விட குறைந்து இருந்தால், குறைவு சதவீதத்திற்கேற்ப காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கும். பயிர் முழுவதும் அழிந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்ற தவறான கருத்தை விவசாயிகள் நம்ப வேண்டாம்.

ஏற்கெனவே இருந்த ஒரு மாத காலத்திற்கு ஏற்படுத்தப்படும் நாற்றங்கால் முறை, தற்போது அதிக மகசூல் பெற தட்டுக்கள் மூலம் பராமரிக்கப்பட்டு 14 நாள்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நடவு செய்யப்படுகிறது. இதனால், ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 20 கிலோ விதை என்பது, தற்போது புதிய மாற்றங்கள் மூலம் 8 கிலோ விதை மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

திருமணமாகாத வருத்தத்தில் இளைஞர் தற்கொலை

செவ்வாய் 11, டிசம்பர் 2018 12:12:26 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory