» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிவில் யெகோவாவின் சாட்சிகள் மாநாடு

வியாழன் 11, அக்டோபர் 2018 6:02:06 PM (IST)

நாகர்கோவிவில் யெகோவாவின் சாட்சிகளின் மூன்று நாள் மண்டல மாநாடு அக்டோபர் 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது.

நாகர்கோவில் வடசேரி டிஸ்டிலரி ரோட்டில் உள்ள  ஹோட்டல் உடுப்பி இன்டர்நேஷனலில் இந்த மாநாடு வெள்ளி முதல்  (12.10.2018) ஞாயிறு வரை (14.10.2018) நடைபெறும். வெள்ளி மற்றும்  சனி அன்று  காலை நிகழ்ச்சிகள் காலை 09.20 மணிக்கு தொடங்கி மாலை 04.50 மணிக்கு நிறைவடையும். ஞாயிறு நிகழ்ச்சிகள் காலை 09.20 மணிக்கு தொடங்கி மாலை 03.50  மணிக்கு நிறைவடையும், இந்த மாநாட்டில் தைரியமாகவும் உறுதியாகவும் இருக்க உதவும் 54 தலைப்பிலான பல்வேறு பேச்சுகள் கொடுக்கப்படும். 

வெள்ளியன்று தைரியமாகவும் உறுதியாகவும் இருக்க உதவும் பல்வேறு அம்சங்களை விளக்கும் விதத்தில் பேச்சுகள் கொடுக்கப்படும். ஆடியோ நாடகம் காண்பிக்கப்படும்.சனியன்று தனிநபர்கள் மற்றும் படைப்புகளான சிங்கம், குதிரை, கீரி, ரீங்கரசிட்டு மற்றும் யானையிடம் இருந்து கற்றுக் கொள்ள உதவும் பேச்சுகளும் வீடியோக்களும் காண்பிக்கப்படும். ஞாயிறன்று காலையில் இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் – இந்த நம்பிக்கை எப்படித் தைரியத்தைத் தருகிறது  என்ற விஷேச பேச்சு கொடுக்கப்படும். மாலை யோனா தைரியத்துக்கும் இரக்கத்துக்கும் ஒரு பாடம் என்ற காணொளி நாடகம் காண்பிக்கப்படும்.

மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அனுமதி இலவசம். பணம் வசூலிக்கப்படாது. எல்லோரும் கலந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் நடைபெறும் யெகோவாவின் சாட்சிகளின் மாநாடுகள் மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory