» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியர் வேண்டுகோள்

வியாழன் 11, அக்டோபர் 2018 5:31:58 PM (IST)


அனைத்து விவசாயிகளும் தங்களது பயிர்களை பாரத பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின்கீழ் பயிர்காப்பீடு செய்து பயனடைய வேண்டும் என ஆட்சியர் பிரசாந்த்வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு வட்டாரத்தில்,  வேளாண்துறை, வேளாண்பொறியில்துறை சார்பில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வேளாண்பொறியில் துறையின் சார்பில் அப்பகுதி விவசாயிகளிடையே நவீன முறையில் நடவு செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இயந்திர நடவு முறையினை அறிமுகப்படுத்துதல், விவசாயிகளுக்கு  கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை வழங்குதல் மற்றும் பயிர்காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்;ள பயிர்காப்பீடு செய்யப்பட்ட 451 விவசாயிகளுக்கு ரூ.86.66 இலட்சம் நிவாரண உதவிகளை வழங்கி, இயந்திர பயிர் நடவு நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்சியர் தெரிவித்ததாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கன்னிப்பூ பருவத்தில் 451 விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டு ரூ.86.66 இலட்சம் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நவம்பர் 30-ம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்வது நல்லதாகும். முன்னெச்சரிக்கையாக பயிர் காப்பீடு செய்தால் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

தற்போது கும்பப்பூ பருவத்திற்கு நமது மாவட்டத்தில் 69 வருவாய் கிராமங்கள் நெற்பயிர்;க்கு காப்பீடு செய்ய தகுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  காலத்திற்கேற்றவாறு, தங்களது நிறுவனங்களில் புதிய தொழில்முறையை புகுத்துவது போல், விவசாயிகளும் தங்களது நிலங்களில் அரசு கொண்டுவரும் புதிய தொழில் முறைகளை, இயந்திர முறைகளை கொண்டுவர வேண்டும். அமெரிக்காவில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையிலும், பிரிட்டன் போன்ற நாடுகளில் 3 சதவீத மக்களும்; விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களது விவசாயத்தில் நவீன முறைகளை பயன்படுத்தி, அதிகளவில் இலாபம் ஈட்டுகிறார்கள்.

பெரும்பாலான விவசாயிகள்,  தங்களுக்கு அருகில் உள்ள, விவசாயத் தொழிலாளர்கள் பயனடைவதற்காக, விவசாயம் செய்கின்றார்கள். அதையே நவீன முறையில், விவசாயம் செய்து, தங்களுக்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் விவசாயிகள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சிரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)குணபாலன், செயற் பொறியாளர் (நீர் ஆதாரத்துறை) வேத அருள்சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான், உதவி செயற்பொறியாளர்; (பேரூராட்சிகள்) மாடசாமி சுந்தர்ராஜ் உள்ளிட்ட வேளாண்துறை, வேளாண்பொறியியல்துறை,விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory