» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நான்கு இடங்களில் மக்கள் குறைதீர் முகாம்கள் : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்

வியாழன் 11, அக்டோபர் 2018 1:02:01 PM (IST)

பொதுவிநியோகத்திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் 13.10.2018 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மேலகிருஷ்ணன்புதூர் பகுதிக்கு மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அலுவலகத்திலும், தோவாளை வட்டத்தில் தடிக்காரன் கோணம் பகுதிக்கு தடிக்காரன் கோணம் ஊராட்சி அலுவலகத்திலும், கல்குளம் வட்டத்தில் முளகுமூடு பகுதிக்கு முளகுமூடு பேருராட்சி அலுவலகத்திலும், விளவங்கோடு வட்டத்தில் நல்லூர்பகுதிக்கு நல்லூர் பேரூராட்சி அலுவலகத்திலும் வட்டவழங்கல் அலுவலர் தலைமையில் சிறப்புமக்கள் குறைதீர் முகாம் 13.10.2018 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

மேற்படி ஊராட்சி,பேரூராட்சி பகுதிக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் ஸ்மார்ட் குடும்ப அட்டைபுகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமல் நாளது வரை ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற முடியாமல் நியாய விலைக்கடையில்  ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப தலைவரின் புகைப்படம்,கைபேசிஎண்,ஆதார் எண் பதிவு செய்தல் போன்ற திருத்தங்கள் செய்து விரைவில் ஸ்மார்ட் குடும்ப அட்டை பெறுவதற்கு மனு அளித்து தீர்வு காணலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory