» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

வியாழன் 11, அக்டோபர் 2018 10:46:04 AM (IST)

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி 10 நாள் திருவிழா நேற்று முதல் தொடங்கியது.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி திருவிழா ஆகியன 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தல், காலை 10 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக்கலைமான் வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயில் சுற்றி வீதியுலா வருதல் ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory