» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்

வியாழன் 11, அக்டோபர் 2018 10:37:59 AM (IST)

கேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் தனித்துணை வட்டாட்சியர் முருகன்,  தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்,   ஆகியோர் கொண்ட குழு இணயம் பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இணயம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் தார்பாலினால் மூடப்பட்டிருந்த பகுதியில் சென்று சோதனை செய்ததில் அங்கு கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக சாக்கு மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அரிசிக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory