» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆளுநர் பன்வா­ரி­வால் நாளை துாத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வியாழன் 11, அக்டோபர் 2018 8:38:29 AM (IST)

துாத்­துக்­கு­டிக்கு நாளை தமி­ழக ஆளுநர் பன்வா­ரி­வால் புரோ­ஹித் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமி­ழக ஆளுநர் பன்வா­ரி­வால் புரோ­ஹித் நாளை துாத்­துக்­கு­டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை நெல்­லை­யில் இருந்து புறப்­ப­டும் ஆளுநர் துாத்­துக்­குடி பழைய மாந­க­ராட்சி அலு­வ­ல­கம் அருகே உள்ள அரசு சுற்­றுலா மாளி­கைக்கு வரு­கி­றார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்­கும் ஆளுநர் காலை உணவு அருந்­து­கி­றார். பின்­னர் அங்­கி­ருந்து ஜார்ஜ் ரோடு வழி­யாக சிவந்­தா­கு­ளம் மாந­க­ராட்சி நடு­நி­லைப்­ பள்­ளிக்கு வரு­கி­றார். பள்ளி வளா­கத்­தில் நடக்­கும்  விழா­வில் ஆளுநர் பங்­கேற்­கி­றார். பிளாஸ்­டிக் ஒழிப்பை ஒட்டி பள்ளி மாணவ, மாண­வி­கள் பிஸ்­கட், சாக்­லேட் கவர் போன்­ற­வற்றை பள்ளி வளா­கத்­தில் ஒரு இடத்­தில் சேக­ரித்து வைத்து அந்த கவரை அந்த கம்­பெ­னிக்கு மாணவ, மாண­வி­கள் அனுப்பி வைக்­கும் பணியை ஆளுநர் துவக்கி வைக்­கி­றார். 

பின்­னர் வித்­தி­யா­ச­மான முறை­யில் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள துணிப்­பையை ஆளுநர் புரோ­ஹித் வெளி­யி­டு­கி­றார். பின்­னர் சிவந்­தா­கு­ளம் பள்­ளி­யில் இருந்து புறப்­ப­டும் ஆளுநர் புதுக்­கி­ரா­மம் ரோடு வழி­யாக துாத்­துக்­குடி பழைய பஸ் ஸ்டாண்­டிற்கு வரு­கி­றார். அங்கு திருச்­செந்­துார் பஸ்­கள் நிற்­கும் இடத்­தில் துாய்மை பணியை மேற்­கொள்­கி­றார். இந்த துாய்மை பணி விழா சுமார் அரை­மணி நேரம் வரை நடக்­கும் என்று கூறப்­ப­டு­கி­றது. மொத்­தம் மாந­க­ராட்­சி­யின் இரண்டு விழா­விற்கு மொத்­தம் ஒரு மணி நேரம் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. பழைய பஸ் ஸ்டாண்­டில் இருந்து புறப்­ப­டும் ஆளுநர் மீண்­டும் பழைய மாந­க­ராட்சி அலு­வ­ல­கம் அருகே உள்ள அரசு சுற்­றுலா மாளி­கைக்கு செல்­கி­றார். 

சிறிது நேரம் ஓய்­வுக்கு பின்­னர் ஆட்சியர் மற்­றும் மாவட்­டத்­தில் உள்ள முக்­கிய அர­சுத்­துறை உயர் அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை மேற்­கொள்­கி­றார். பின்­னர் மதிய உண­வுக்கு பின்­னர் மதி­யம் பொது­மக்­கள், பல்­வேறு சமூக அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளி­டம் கோரிக்கை மனுக்­கள் பெறு­கி­றார். அங்­கி­ருந்து புறப்­ப­டும் ஆளுநர் வாகைக்­கு­ளம் விமான நிலை­யத்­திற்கு வரு­கி­றார். அங்­கி­ருந்து விமா­னம் மூலம் சென்னை செல்­கி­றார். ஆளுநர் வரு­கையை ஒட்டி துாத்­துக்­கு­டி­யில் பலத்த போலீஸ் பாது­காப்பு போடப்­பட்­டி­ருக்­கி­றது. ஆளுநர் தங்கி நிற்­கும் அரசு சுற்­றுலா மாளிகை, சிவந்­தா­கு­ளம் பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆளுநர் செல்­லும் வழி­யில் உள்ள ரோடு, விமான நிலை­யம் உள்­ளிட்ட அனைத்து இடங்­க­ளி­லும் நுாற்­றுக்­க­ணக்­கான போலீ­சார் பாது­காப்பு பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாளை ஆளுநர் வந்­தா­லும் நேற்று முன்­தி­னம் முதலே துாத்­துக்­கு­டி­யில் போலீஸ் ரோந்து மற்­றும் பாது­காப்பு துவங்­கி­யுள்­ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Oct 11, 2018 - 11:40:14 AM | Posted IP 162.1*****

பஸ் ஸ்டாண்டில் திருச்செந்தூர் பஸ் நிற்கும் இடத்தை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக பக்கிள் ஓடைக்குள் இறங்கி அதை சுத்தப்படுத்தலாம். பஸ் ஸ்டாண்ட் கழிவறையை கழுவி விடலாம். பஸ் ஸ்டாண்ட்ஐ சுத்தி இருக்கும் பாதாள சாக்கடை மூடி அத்தனையும் உடைந்தும் திறந்து கிடக்கிறது. அதை சரி செய்து மூடலாம். பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் அனைவரும் சிறுநீர் கழித்து பிண நாத்தம் நாறுகிறது. அதை பினாயில் போட்டு கழுவலாம். பஸ் ஸ்டாண்ட் சுவர் முழுவதும் பான்பராக் எச்சி துப்பி நாறுகிறது. அதை துடைக்கலாம். பஸ்ஸில் ஏறி மேலே தண்ணீர் ஊற்றி கீழே ஒழுகுகிறதா என்று பார்க்கலாம். பஸ் ஸ்டாண்ட் உள்ளே வெளியே அனைத்து விளக்குகளும் எரிகிறதா என்று பார்க்கலாம். பஸ் ஸ்டாண்ட் உள்ளே தரையில் சுவரில் அனைத்து டைல்சுகளும் உடைந்து கிடக்கிறது. ஒரு கரண்டி எடுத்து அதை பூசலாம். அதெல்லாம் சரி. இதைத்தான் மாநகராட்சி ஊழியர்களே செய்யலாமே. கவர்னர் எதற்கு? இந்த செய்தின் தன்மையை பார்த்தே கவர்னர் எவ்வளவு தரம் தாழ்ந்து போகிறார் என்பதை கணிக்கலாம்.

makkalOct 11, 2018 - 10:56:12 AM | Posted IP 162.1*****

பஸ் ஸ்டாண்ட் tailot எப்படி இருக்குனு முதல பாக்க சொல்லுங்க

DasaOct 11, 2018 - 10:08:53 AM | Posted IP 162.1*****

பேருந்து நிலையம் பதிலாக பக்கில் ஓடையை ..., !

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory