» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் இளைஞர் வெட்டிக்கொலை : 3 பேர் கைது

செவ்வாய் 25, செப்டம்பர் 2018 11:02:00 AM (IST)

நாகர்கோவிலில் முன் விரோதத்தால் இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலை அடுத்த கீழ சரக்கல் விளையைச் சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி சகானா.  இவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். சம்பவத்தன்று இரவு செல்வம் கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தனது மோட்டார்பைக்கில் சென்றாராம்.   பின்னர் அவர்  நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தபோது,   சரக்கல்விளை அருகே  அவரை வழிமறித்து ஒரு கும்பல் அரிவாளால்  வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. 

இதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாறு போலீஸார் செல்வத்தின் சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரித்து வந்த நிலையில் செல்வத்தின் நண்பரான ஆஸ்டின் என்பவரை இளங்கடையைச் சேர்ந்த  உஸ்மான் (30)  தாக்கியுள்ளார். இதையறிந்த செல்வம் உஸ்மானை சந்தித்து அவரை கண்டித்தார். அப்போது ஆத்திரத்தில் உஸ்மானை செல்வமும், ஆஸ்டினும் சேர்ந்து தாக்கினர். 

இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் செல்வத்தை கொலை செய்ய உஸ்மான் திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களான கீழசரக்கல்விளையைச் சேர்ந்த பிரதீப், பிரபு மற்றும் புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்கள் உஸ்மானுக்கு உதவ சம்மதித்தனர்.  அவர்கள் திட்டப்படி சம்பவத்தன்று இரவு செல்வத்தை அவரது வீட்டு அருகிலேயே வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து உஸ்மான், பிரதீப், பிரபு, ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். செல்வம் கொலைக்கு முன்விரோதம் மட்டும் தான் காரணமா? வேறு எதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory