» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொய்கை அணையை தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்

திங்கள் 24, செப்டம்பர் 2018 5:27:40 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பொய்கை அணையிணை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால், அணையினை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஏதேனும் கசிவுகள் இருந்தால் அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். மேலும் அதனை துரித கதியில், சரி செய்து அதன் விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தொடர்ந்து கண்காணித்து தேவைக்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தளவாய்சுந்தரம் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். 

பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (நீர் வள ஆதார அமைப்பு)  வேத அருள்சேகர், உதவி செயற் பொறியாளர் வசந்தி, உதவி பொறியாளர்கள் ரமேஷ் மற்றும் வின்ஸ்டன் லாரன்ஸ், இருளப்பபுரம் பெரியசாமி பாண்டியன் பால் உற்பத்தியாளர்  சங்கத்தலைவர் அசோகன், பொழிக்கரை மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர்   கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory