» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்குநேர் வாருங்கள் : எதிர்கட்சிகளுக்கு துணைமுதல்வர் சவால்

சனி 22, செப்டம்பர் 2018 7:59:55 PM (IST)

நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்கு நேர் திருப்பரங்குன்றத்திற்கும், திருவாரூருக்கும் வாருங்கள் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் நாகர்கோவிலில் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்துப் பேசியுள்ளார்.

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர். விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆண்டபோது தமிழகத்தில் பசி இல்லை. பிறக்கும்போதே கருணை உள்ளத்தோடு பிறந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும், அரசியலிலும் இருந்தபோதும் கொடுத்தார். அவர் வழியில் இந்தியாவில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார். அதே ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செய்கிறது. 

முதல்வர் கனவில் மிதந்தவர்கள் கண்ணீர் கடலில் நிற்கிறார்கள். அந்த விரக்தியில் வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்கு நேர் திருப்பரங்குன்றத்திற்கும், திருவாரூருக்கும் வாருங்கள். ஆட்சியைக் கலைக்காமல் தூங்கமாட்டேன் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். அப்படியானால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டியதுதான். 2016-ம் ஆண்டிலும் சட்டமன்ற தேர்தலிலும் கலர் கலராக டிரஸ் போட்டார், நடந்து பார்த்தார், சைக்கிளில் சென்றார். ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் டீ குடித்தார், நாம டீ கடையே நடத்தியிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சாமிSep 24, 2018 - 10:30:04 AM | Posted IP 162.1*****

எதிரிகளுக்கு சாட்டையடி சபாஷ் ஜல்லிக்கட்டு நாயகரே .

சாமான்யன்Sep 23, 2018 - 12:23:10 PM | Posted IP 172.6*****

வரத்தானே போகிறார்கள். அம்மாவின் தொகுதியை, ஆட்சியை கையில் வைத்துக் கொண்டும், காவு கொடுத்த நீங்க எல்லாம் சவால் விடுவதற்குப் பதிலாக.......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory