» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உங்கள் ஒத்துழைப்பால் தமிழகம் முன்னேறும் : முதல்வருக்கு பொன்ராதாகிருஷ்ணன் பாராட்டு

சனி 22, செப்டம்பர் 2018 7:46:58 PM (IST)

மத்திய மாநில அரசுகள் சேர்ந்து பணிபுரிந்தால் இந்தியாவில் முதல் மாநிலமாகத் தமிழகம் வளர்ச்சி பெரும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், 1982 காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் மக்களிடம் மோதல் எழுந்தபோது எம்.ஜி.ஆர். இங்குவந்து தங்கி மக்களிடம் சுமுக நிலை ஏற்படுத்த உழைத்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது பழைய கட்சிகளின் கொள்கைகளை மாற்றினார். எம்.ஜி.ஆர். தேசியத்துக்கு முக்கியத்துவம் தந்தவர். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வந்தது போன்று முதல்வராக நீங்கள் வந்துள்ளீர்கள். எங்கள் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. குமரிக்கு வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும். அதற்கு நீங்கள் முழு ஆதரவு தருகிறீர்கள். தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். அடுத்து விமான நிலையம் அமைக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் இடம் இல்லாத பகுதி. எனவே, இப்போது பார்த்த இடம் அல்லது வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் மத்திய அரசு நிதியில் கட்டப்படுகிறது. வடசேரி மற்றும் செட்டிக்குளத்தில் அமைக்கப்படும் மேம்பாலத்துக்கும் நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் சேர்ந்து பணிபுரிந்தால் இந்தியாவில் முதல் மாநிலமாக வரும். நீங்கள் முழு ஒத்துழைப்பு தந்துகொண்டிருக்கிறீர்கள், தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பால் தமிழகம் முன்னேறும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory