» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர் : நாகர்கோவிலில் முதல்வர் பெருமிதம்

சனி 22, செப்டம்பர் 2018 6:01:26 PM (IST)
அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர் என நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

நாகர்கோவில் ஸ்காட் கல்லுாரியில் மறைந்த முன்னாள்முதல்வர் எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ,விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார், செல்லுார் ராஜு, வேலுமணி, மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை, அதிமுக எம்பி விஜயகுமார், மாவட்ட செயலாளர் ஜான்தங்கம், கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, 

மும்மத வழிபாட்டு தளங்களால் ஆன்மீக பூமியாக கன்னியாகுமரி விளங்குகிறது. ஒகி புயலில் உயிரிழந்த இந்த மாவட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ 36 கோடி வழங்கப்பட்டது.குளச்சலில் ரூ 96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். 

சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது . நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். கிள்ளியூர், திருவட்டாறு வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்து படிப்பு இடங்களை 100லிருந்து 150 ஆக உயர்த்தப்படும் என்றார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான மக்கள் பணிகளை அதிமுக அரசு செய்து வருகிறது. இதனால் அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் 

தேவையில்லாமல் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்கின்றனர். எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, அதனால் விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும். பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான குமரி முனைக்கு ரூ 6 கோடியில் புதிதாக 2 படகுகள் வாங்கப்படும், ரூ 20 கோடியில் படகு தளம் விரிவாக்கப்படும் .இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory