» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குளச்சலில் ஆட்டோ - கார் மோதிக்கொண்ட விபத்து : 3 பேர் படுகாயம்

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 6:33:13 PM (IST)

குளச்சலில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மணவாளக்குறிச்சி கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் (35). ஆட்டோ ஓட்டுனர். இவர் சம்பவத்தன்று குளச்சல் பகுதியில் சவாரி சென்று விட்டு மறுபடியும் மணவாளக்குறிச்சிக்குதிரும்பி வந்துள்ளார். வெட்டுமடை பகுதியில் வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி நொறுங்கியுள்ளது.  

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஜான்பீ்ட்டர் மற்றும் காரை ஓட்டி வந்த சுதிர் (50) மற்றும் ஆட்டோவில் இருந்த பயணி டாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Thoothukudi Business Directory