» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி : ஒருவர் கைது மற்றொருவருக்கு வலை

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 6:22:36 PM (IST)

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 லட்சரூபாய் மோடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை மெதுகும்மல் பகுதியினை சேர்ந்த பிஜூ (34). இவர் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் சுமார் ஒன்றே கால் லட்சம் பணம் வாங்கினாராம். தொடர்ந்து அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் போது மலேசியா விமான நிலையத்தில் ராஜ் என்பவர் உங்களையெல்லாம் வேலைக்கு அழைத்து செல்வார் என கூறினாராம். 

அதன்படி மலேசியா விமான நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களை வரவேற்ற ராஜ், அவர்களிடமிருந்து மேலும் பணத்தை வாங்கி கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் தவித்த குமரி இளைஞர்கள் 24 ஆயிரம் பணம் கட்டி மறுபடியும் இந்தியா வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நொய்யாற்றின்கரை போலீசில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து பிஜூவை கைது செய்தனர். ராஜை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory