» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மந்திக்கோட்டில் சிறப்பு மனுநீதித்திட்ட முகாம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 1:40:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் மந்திக்கோட்டில் சிறப்பு மனுநீதித்திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதற்கட்ட நிகழ்ச்சி வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், மத்திக்கோடு வருவாய் கிராமம், மத்திக்கோடு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மத்திக்கோடு  அரசு உயர்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதற்கட்ட நிகழ்ச்சி 20.09.2018 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே விளவங்கோடு வட்டம், மத்திக்கோடு ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory