» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வனஅதிகாரிகளை தாக்கி கொல்ல முயற்சி : பெண் உள்பட 2 பேர் கைது

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 12:50:09 PM (IST)

மார்த்தாண்டம் அருகே வன அதிகாரிகளை தாக்கி கொல்ல முயன்ற சம்பவத்தில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பேச்சிப்பாறை வனப்பகுதிகளில் இருந்து தேக்கு உள்ளிட்ட உயர் ரக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக மரங்களை குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு அறுவை மில்லில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக செயல்பட்டது பேச்சிப்பாறையை சேர்ந்த சவுந்தர் (35) என தெரிய வந்தது. இதையடுத்து சவுந்தரை அதிகாரிகள் தேடி வந்தனர். 

இந்நிலையில் மார்த்தாண்டம் அருகே கோட்டகம் பகுதியில் சவுந்தர் பதுங்கி இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அருண் (30), ஜாண் மிரான்(38), விஜயன்(40) ஆகிய 3 பேரும் காரில் கோட்டகம் பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சவுந்தரை பிடித்து காரில் ஏற்றுவதற்காக கொண்டு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல், சவுந்தரை விடுவிக்குமாறு வனத்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தார்களாம். 

இதில் கோபமடைந்த கும்பல் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் காரை அடித்து உடைத்து வன அதிகாரிகளையும் தாக்கியது.இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்று 3 வன அதிகாரிகளையும், கார் டிரைவர் சுரேஷ்யும் (35) மீட்டனர் . பின்னர், படுகாயமடைந்த வன அதிகாரிகள் 3 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

மேலும், மரங்களை கடத்திய சவுந்தரையும், அதிகாரிகளை தாக்கிய கும்பலை சேர்ந்த லில்லிபாய் (53) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டகத்தை சேர்ந்த விஜயகுமார்(35), சவுந்தர், சந்தோஷ், ரதீஷ், ரெபின், உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory