» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தீபாவளிக்கு தற்காலிக கடைகள் அமைக்க அழைப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 7:44:07 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக வெடிகள் விற்பனை கடைகள் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்ததாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிப்பொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக உரிமம் பெற 28.09.2018 தேதிக்குள் வர்த்தகர்கள் தொடர்புடைய ஆவணங்களுடன் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 28.09.2018 தேதிக்கு பின் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விண்ணப்பிக்கும் வர்த்தகர்கள் வெடிப்பொருள் விதிகள் 2008-ன் படி கீழ்கண்ட விதிகள் படி செயல்பட வேண்டும். 

எளிதில் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்படவேண்டும். வெடிப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு கட்டிடமும் 3 மீட்டர் தூரம் இடைவெளியில் தான் அமையவேண்டும் மற்றும் 50 மீட்டர் தூரம் இடைவெளிக்குள் பாதுகாப்பல்லாத வேலைகள் நடைபெறும் இடம் அமைந்திருக்ககூடாது.வெடிபொருள் விற்பனை செய்யப்படும் இடங்கள் ஒவ்வொன்றும் எதிரெதிரே அமையக்கூடாது.வெடிபொருள் விற்பனை செய்யப்படும் இடத்திற்குள் மற்றும் பாதுகாப்பல்லாத தூரத்திற்குள் எண்ணெயால் எரியப்படும் விளக்குகள், எரிவாயுவால் எரியப்படும் விளக்குகள், ஒளியில்லா விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. 

மின்விளக்குகள் சுவர் மற்றும் மேல்மட்டத்தில் மட்டுமே பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். தொங்கவிடப்பட்ட மின்விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. மின்விசை சுவிட்சுகள் சுவரில் நிலையாக பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வரிசைக்கும் பிரதான சுவிட்சுகள் அமைக்கப்பட வேண்டும். வெடிபொருட்கள் 50 மீட்டர் தூரம் இடைவெளிக்குள் காட்சிக்கு வைக்கப்படகூடாது.ஒரே பகுதிக்குள் 50 கடைகளுக்கு மேல் அனுமதிக்க இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory