» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வடிவீஸ்வரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:29:51 PM (IST)

நாகர்கோவில் வடிவிஸ்வரம் குழந்தைகள் மையத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் மூலமாக ஒரு தொகுதிக்கு 40 கர்ப்பிணிகள் வீதம் 50 தொகுதிகளில் 2000 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று செப் 14 ம் தேதி  நடைபெறுகிறது. இதில் நாகர்கோவில் நகர்புறத்தை சார்ந்த 160 கர்ப்பிணி பெண்களுக்கும்,  ஊரகப் பகுதிகளில் 1840 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பற்றியும், தன்சுத்தம் பற்றியும் கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் 10 கிலோ எடை கூட வேண்டும் என்றும், சத்தான உணவு உட்கொள்ள வேண்டும் என்றும், கருவுற்ற காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் கருவில் உள்ள குழந்தை நன்றாக வளர்ந்து 3 கிலோ எடையில்  ஆரோக்கியகாக பிறக்கும் என்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்படுவதுடன், கலந்து கொள்ளும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு பூ , பழங்களுடன் வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டு ஐந்து வகை கலவை சாதமும் வழங்கப்படுகிறது.   இவ்விழா ஏழை கர்ப்பிணிப் பெண்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால்  ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.   

இவ்விழாவில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு. மதுசூதனன், இருளப்பபுரம் பெரியசாமி பாண்டியன் பால் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் அசோகன்  , எருசலேம் புதிய பயண குழு உறுப்பினர் மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ்  மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory