» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மானியவிலை கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம் : விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 2:18:35 PM (IST)

மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெற விரும்பும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு 2018-19 -ம் நிதி ஆண்டில், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் இயந்திரங்கள்/கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ 53.51 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும். 

மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின் படி அரசு மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையும், இதர விவசாயிகளுக்கு 25 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 11 எண்கள் டிராக்டர், 8 எண்கள் பவர் டில்லர், 1 எண் நாற்று நடும் கருவி மற்றும் 48 எண்கள் இதர வேளாண் இயந்திரங்கள் / கருவிகள் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ.33.51 இலட்சங்களும், 2 எண்கள் வாடகை மையங்கள் அமைக்க ரூ.20 இலட்சங்களும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in -ன் மூலம் அறிந்து பயன்பெறலாம் என கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory