» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தெங்கன்குழியில் ஹால்ட் ரயில்நிலையம் வேண்டும் : குமரி ரயில்பயணிகள் சங்கம் காேரிக்கை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 1:42:51 PM (IST)
தெங்கன்குழியில் ஹால்ட் ரயில்நிலையம் அமைக்க கன்னியாகுமரி மாவட்ட ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில்பயணிகள்சங்கம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது. திக்கணங்கோடு அருகில் உள்ள தெங்கன்குழி என்ற இடத்தில் புதிதாக ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த தெங்கன்குழி என்பது குளச்சல் - முளகுமூடு சாலையில் திக்கணங்கோடுக்கு அடுத்து ரயில்வே இருப்பு பாதையும் சாலையும் கிராசிங் உள்ள இடத்தில் அமைந்த பகுதி ஆகும். இந்த கிராசிங் பகுதியில் புதிய ஹால்ட் ரயில்நிலையம் அதாவது பயணிகள் ரயில்கள் மட்டும் நிற்கும் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும். இந்த தெங்கள்குழி திக்கணங்கோடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி மக்கள் தற்போது இரணியல் அல்லது குழித்துறை ரயில் நிலையத்துக்கு தற்போது சென்று ரயிலில் பயணம் செய்கின்றனர். 

இது மட்டுமில்லாமல் இந்த குளச்சல் - திக்கணங்கோடு - முளகுமூடு சாலையில் அருகில் உள்ள அனைத்து மக்கள் எல்லாம் சாலை மார்க்கமாக அடுத்த ரயில் நிலையம் செல்ல வேண்டுமானால் திக்கணங்கோடு வழியாக திங்கள்நகர் வந்து இரணியல் ரயில் நிலையம் வரவேண்டும். அல்லது திருவிதாங்கோடு அல்லது முளகுமூடு வந்து இரணியல் ரயில் நிலையம் அல்லது குழித்துறை ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அதிக தூரம் பேருந்தில் பயணம் செய்து ரயிலில் பயணம் செய்ய இருப்பதால் இந்த பகுதி பயணிகள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்க்கின்றனர்.

இந்த தெங்கன்குழி பகுதி ரயில்மார்க்கமாக பயணிக்கும் போது இரணியல் மற்றும் பள்ளியாடி ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட 8.5 கி.மீ பகுதிக்கு இடையே  அமைந்துள்ள பகுதி ஆகும். இரண்டு மார்க்கங்களிலும் அதாவது தெங்கன்குழியிலிருந்து இரணியலுக்கு நான்கு கி.மீ தூரமும் பள்ளியாடிக்கு நான்கு கி.மீ தூரமும் சரியாக அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் ஹால்ட் ரயில் நிலையமாக அமைக்க கோரிக்கை வைப்பதால் அதற்கு தேவையான இடம் தற்போது இருப்புபாதையின் அருகிலே உள்ளது. இதற்கு என எந்த ஒரு நில ஆர்ஜிதமும் தேவைபடாது.

தெங்கன்குழியில் ஹால்ட் ரயில்நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள்  கோரிக்கை வைக்கின்றனர். தற்போது கன்னியாகுமரி – திருவனந்தபுரம் ரயில்பாதை இருவழிபாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இருவழிபாதை பணிகள் செய்யும் போது இந்த பகுதியில் ஹால்ட் ரயில் நிலையம் அமைப்பது மிகவும் எளிதாக அமைத்துவிட முடியும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory