» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உடல் பருமனை கிண்டல் செய்ததால் மாணவி தற்கொலை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 1:00:17 PM (IST)

தக்கலை அருகே உடல் பருமனாக இருந்ததை கிண்டல் செய்ததாக விரக்தியடைந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திக்கணங்கோடு கீழ தாரவிளையைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் அனிதா, (வயது 17). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார். உடல் பருமனாக இருந்த அனிதாவை பள்ளி மாணவிகளும், அக்கம் பக்கத்தினரும் கேலி, கிண்டல் செய்ததால் மாணவி மனம் உடைந்து காணப்பட்டாராம்.சம்பவத்தன்று அனிதா வீட்டின் ஒரு அறையில் இருந்தார். அப்போது அந்த அறையில் இருந்து அனிதாவின் அழு குரல் கேட்டது. இதையடுத்து அவரது தந்தை குமார். ஓடிச்சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தூக்கில் தொங்கிய அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தக்கலை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். குமார். கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory