» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:01:50 PM (IST)

நாகர்கோவிலில் லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளையடித்தவர்களை பாேலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்தவர் மாரிக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி பிரியதர்ஷனி(23). மாரிக்குமார் அவரது மனைவி பிரியதர்ஷனி ஆகியோர் இரவு வீட்டின் மாடியில் டி.வி. பார்த்து விட்டு கீழ் தளத்தில் உள்ள அறையில் வந்து தூங்கினார்கள். காலை கண்விழித்து பார்த்த  போது வீட்டின் மாடி கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

பீரோவில் இருந்த சுமார் 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகையின் மதிப்பு ரூ.1 1/2லட்சமாகும். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை சம்பவம் குறித்து பிரியதர்ஷனி கோட்டார் போலீசில் புகார் செய்ததின் பேரில்  போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory