» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லாரி மோதி மின்கம்பம்விழுந்ததில் வியாபாரி பலி

வெள்ளி 14, செப்டம்பர் 2018 11:49:12 AM (IST)

கருங்கல் அருகே லாரி மோதி மின்கம்பம் உடைந்து நடந்து சென்ற பால் வியாபாரி மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரை ஆழகாணிவிளை பகுதியை சேர்ந்தவர் பால் ரெத்தினம். (வயது 67). இவர் வீட்டில் மாடு வளர்த்து பால் கறந்து விற்பனை செய்து வந்தார்.பால்ரெத்தினம் இன்று அதிகாலை வழக்கம்போல் கறந்த பாலை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு கொடுத்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். காலை 5.30 மணி அளவில் அவர் தனது வீடு அருகே சென்று கொண்டிருந்தபோது கருங்கலில் இருந்து புதுக்கடை நோக்கி வந்த லாரி மின்கம்பத்தில் மோதி அந்த கம்பம்  ரெத்தினம் மீது விழுந்ததால் அவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்தார். 

விபத்து நடந்ததும் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்று விட்டது. பால்ரெத்தினம்  மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory