» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நான்கு எம்எல்ஏக்கள் உள்பட 500 பேர் மீது வழக்குபதிவு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 10:46:08 AM (IST)

நாகர்கோவிலில் தடையை மீறி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய அரசு, ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக,  குமரி மேற்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், ரபேல் போர் விமான ஊழலைக் கண்டிப்பதாகக் கூறி, நாகர்கோவிலில் நேற்று முன்தினம் மாலை  பேரணி, ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதரணி, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதற்கிடையே, தடையை மீறி பேரணி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் உள்பட 500 பேர் மீது கோட்டார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory