» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரிப்பு

வியாழன் 13, செப்டம்பர் 2018 8:01:27 PM (IST)

விநாயகர் சதுர்த்தி விழாவை இன்று கொண்டாடப்பட்தை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. 

தோவாளையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று தோவாளை மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. உள்ளூர் வியாபாரிகள் பலர் பூக்களை வாங்கி சென்றனர். பிச்சி, மல்லி போன்ற பூக்கள் விலையில் மாற்றம் இல்லை.  அருகம்புல் ஒரு கட்டு ரூ.10க்கு விற்பனையாகும். 

இன்று விநாயகர் சதுர்த்தியை யொட்டி விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து பூஜை செய்யப்படும் என்பதால் அருகம்புல் தேவை அதிகமாக இருந்தது. இதனால் அருகம்புல் கட்டு 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.30க்கு விற்பனையானது. பிள்ளையார் சிலைக்கு மாலையாக போடப்படும் எருக்கம்பூ கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டது. பூஜையில் பயன்படுத்தப்படும். தேட்டிப்பூ கிலோ ரூ.200 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory