» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழகஅரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி

வியாழன் 13, செப்டம்பர் 2018 6:49:47 PM (IST)
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பேருந்துநிலையத்தில் இன்று (12.09.2018) தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தெரிவித்ததாவது:- தமிழக அரசு ஏழை எளிய கிராமபுற மக்களுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கால்நடைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழை பெண்களின் கல்வியை உயர்த்துவதற்கு சமூக நலத்துறையின் மூலம் பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதியாக ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதவியாக ரூ.50 ஆயிரமும், தாலிக்கு தங்கம் வழங்கிய திட்டங்கள் குறித்தும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மக்கள் நல வாழ்வுத்துறை மூலம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதியுதவி மகப்பேறு திட்டம், ஏழை, எளிய மக்களுக்கு பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் குறித்தும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடப்புத்தகங்கள், வண்ண பென்சில்கள், கணித உபகரணங்கள் 14 வகையிலான கல்வி உபகாரணங்கள் குறித்தும், பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் 16 வகையான பொருட்கள் உள்ளடங்கிய அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் ஆகிய திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory