» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன்அரிசி பறிமுதல்

சனி 11, ஆகஸ்ட் 2018 1:18:50 PM (IST)
குமரி மாவட்டம் வழியே கேரளாவிற்கு நுாதனமாக கடத்த முயன்ற இரண்டரை டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவிற்கு நுாதனமாக ரேசன்பொருட்கள் கடத்தப்படுவதும் அதை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் தடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி போலீசார் நடத்திய சோதனையில் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் இருந்து கேரளாவிற்கு தக்காளி பெட்டியில் மறைத்து நூதன முறையில் கடத்தப்பட்ட சுமார்  இரண்டரை டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் சுனில்குமார் கைது செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory