» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஏடிஎம் மில் ரகசியகருவி பாெருத்தி மோசடி : திருவட்டாறு போலீசார் விசாரணை

சனி 11, ஆகஸ்ட் 2018 11:46:04 AM (IST)

சுவாமியார்மடம் அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் ரகசிய மின்னணு கருவி களைப் பொருத்தி மோசடியில் ஈடுபட முயற்சி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் சந்திப்பு அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து, பணம் எடுப்பவர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களைத் திருடும் வகையில், கார்டு ஸ்கேனர், நுண் கேமரா, மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகளை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தி வைத்திருந்தனர். இதனை வெள்ளிக்கிழமை பிற்பகலில், இயந்திரத்தில் பணம் வைக்கச் சென்ற பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் ஜெயஸ்ரீ திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் சம்பந்தப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை சோதனையிட்டு, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மர்ம நபர்களின் இந்தச் செயல் காரணமாக வாடிக்கையாளர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory