» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கபடுமா ? : ரயில்பயணிகள் கோரிக்கை

சனி 11, ஆகஸ்ட் 2018 11:23:02 AM (IST)

திருவனந்தபுரம் - மங்களுர் தினசரி இரவு நேர ரயில் குமரிக்கு ரயில்கால அட்டவணையில் நீட்டிப்பு செய்யப்படுமா? என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,      கன்னியாகுமரியிலிருந்து நேரடியாக மங்களுருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டென்னீஸ் 1989-ம் ஆண்டு ரயில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அப்போது முதல் இதுவரை சுமார் 25 ஆண்டுகளாகவே கன்னியாகுமரியிலிருந்து மங்களுர்க்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. 

திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு இயக்கப்படும் மூன்று ரயில்களில் எதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இவ்வாறு இந்த ரயிலை நீட்டித்து இயக்க முடியாத நிலை இருந்தால் கன்னியாகுமரியிலிருந்து மங்களுர்க்கு புதிய தினசரி ரயில் வரும் ரயில்காலஅட்டவணையில் அறிவித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்து வரும் காலஅட்டவணையில் அறிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory