» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

சனி 11, ஆகஸ்ட் 2018 11:05:13 AM (IST)

தக்கலை அருகே காதல் மனைவியை கார் ஏற்றி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டை சேர்ந்தவர் திருமால். இவரது மகள் சுசி பிரியா (29). சுசிபிரியாவுக்கும், கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டி ஜெனித் (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால்திருமணம் நடந்த சில ஆண்டுகளில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சுசிபிரியாவும், கிறிஸ்டி ஜெனித்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இடையே விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சுசிபிரியா நேற்று தக்கலை போலீசில் கணவர் கிறிஸ்டி ஜெனித் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- 

தக்கலை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள என் வீட்டில் நேற்று மாலை நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது கிறிஸ்டி ஜெனித்தும், மேலும் 4 பேரும் ஒரு காரில் அங்கு வந்தனர். அவர்கள் என்னை வலுகட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றனர்.நான் அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினேன். அப்போது அவர்கள் என்னை கார் ஏற்றி கொல்ல முயன்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஜெனித்தை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory