» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் : குமரி மாவட்டஆட்சியர் தகவல்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 6:29:13 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் குறைகள் மற்றும் இன்னல்கள் அவ்வப்போது கேட்டு அறிந்து களைந்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இரண்டாவது திங்கள் கிழமையில் மாற்றுத்திறனாளியிடம் மனுக்கள் பெறும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 2018-மாதத்திற்கான கூட்டம் 13.8.2018 அன்று மதியம் 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தொடர்புடைய அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் குறைகள் களைந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், 13.8.2018 அன்று மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்படும் மனுக்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மனுக்களை (ஆன்லைன்) பதிவு செய்து நாஞ்சில் கூட்ட அரங்கில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory