» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாயமான மீனவர்களை மீட்க கோரி உண்ணாவிரதம் : ராஜேஷ்குமார் எம்எல்ஏ., பங்கேற்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 6:01:45 PM (IST)படகு மீது கப்பல் மோதியதில் மாயமான குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராமன்துறை கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளா மாநிலம் கொச்சி அருகே முனம்பம் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகப் பகுதியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, கேரளா மற்றும் வெளிமாநில மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த மீனவர்கள் ஜேசுபாலன், ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், எட்வின், ஷாலு, யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ், மற்றொரு சகாயராஜ், மணக்குடியை சேர்ந்த வல்சன், அருண்குமார் ஆகிய 11 பேரும், கேரளாவை சேர்ந்த ஷைஜூ என்பவரும், கொல்கத்தாவை சேர்ந்த நரேன்சர்தார், பெபல்தாஸ் ஆகிய 2 பேருமாக மொத்தம் 14 பேர், கடந்த 7–ந் தேதி நள்ளிரவு 12.30 மணி அளவில் ராமன்துறையை சேர்ந்த ஜேசுபாலனுக்கு சொந்தமான விசைப்படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.அன்று அதிகாலை 2.45 மணி அளவில் அவர்கள் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மீனவர்களில் சிலர் விசைப்படகின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு தத்தளித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 பேரும் இறந்தது தெரியவந்தது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.மேலும் ராமன்துறையை சேர்ந்த எட்வின், கொல்கத்தாவை சேர்ந்த நரேன் சர்தார் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.மீதி உள்ள 9 பேர் கடலில் மாயமாகி விட்டனர். 9 பேரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களில் 7 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மாயமான மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் கப்பல் மோதியதில் மாயமான குமரி மாவட்ட மீனவர்கள் 7 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராமன்துறை கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜேஷ்குமார் எம்எல்ஏ., தலைமையில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory