» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 11:18:04 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில்  மீண்டும் கன மழை பெய்து வருவதால்,  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த வாரம் அதிகளவில் பெய்தது. கடந்த 2 நாள்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், புதன்கிழமை மாலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணி அளவில் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. பாலமோரில் 47.2 மி.மீ. மழை பெய்ததால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,466 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 1137 கனஅடி தண்ணீரும் வரத்தாக உள்ளது. இதனால் பெருஞ்சாணி அணை 75 அடியையும், பேச்சிப்பாறை அணை 20.10 அடியையும் எட்டியுள்ளன.மழை தொடர்ந்து பெய்தால் அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். எனவே குழித்துறை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory