» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிற்றாறு அணையிலிருந்து மீண்டும் உபரிநீர் திறப்பு : திற்பரப்பில் குளிக்க தடை

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:13:55 AM (IST)

குமரி மாவட்டத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் சிற்றாறு அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வியாழக்கிழமை உபரியாக வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை  இரவில் தொடங்கிய மழை வியாழக்கிழமை காலை வரை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து, ஆறுகளில் வெள்ளம் அதிகரித்தது. மேலும், அணைகளுக்கும் அதிகளவில் நீர்வரத்து உள்ளது. மாவட்டத்தில் பிரதான அணைகளான சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 16 அடியைக் கடந்த நிலையில் உள்ளது (மொத்தக் கொள்ளளவு 18 அடி). கடந்த வாரம் பெய்த மழையின்போது இந்த அணைகளிலிருந்து விநாடிக்கு 250 கன அடி தண்ணீர் 2 நாள்கள் வெளியேற்றப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக சிற்றாறு அணைகளுக்கு விநாடிக்கு 511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, சிற்றாறு-1 அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வெளியேற்றப்பட்டது.இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory