» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கியஅறிவிப்பு

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 7:15:26 PM (IST)

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற கன்னியாகுமரி மாவட்டத்தைசேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு தமிழகஆளுநரை தலைவராகக் கொண்ட தொகுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்வி அல்லது பயற்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு தொழில்நுட்ப பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு ஆகியவற்றுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித் தொகை பெற பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்து அதில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் கல்வி உதவித்தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை, கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 15.10.2018 வரை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட முழுமையான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 15.11.2018 ஆகும். மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி கல்வி உதவித் தொகையினை முன்னாள் படைவீரர்கள் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிராசந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory