» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மூன்று திமுக.,வினர் மரணம் : கருணாநிதி இறந்ததால் அதிர்ச்சி

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 6:25:44 PM (IST)

தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமான செய்தி அறிந்த அதிர்ச்சியில் தி.மு.க.வினர் 3 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த இரண்டுநாட்களுக்கு முன் காலமானார். இதனால் அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் பல திமுக தொண்டர்கள் உயிரிழந்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள உண்ணீர் கோணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (52). 

இவர் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வில் நிர்வாகியாக இருந்தார். இவர் நேற்று காலை முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திடீரென்று கிறிஸ்துதாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதுபோல் அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சாமிகண்நாடார்(62). இவரும் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களது உட லுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory