» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் விடிய விடிய கொட்டிய மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 6:07:32 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இரவு விடிய விடிய கொட்டி தீர்த்தது. கன்னிமார், சுருளோடு, புத்தன் அணை பகுதியில் இரவு கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையினால் அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கன்னிமாரில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவானது. இரணியல், ஆணைக்கிடங்கு, கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குளச்சல், முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. 

நாகர்கோவிலிலும் இரவு மழை தூறிக்கொண்டே இருந்தது.இன்று காலையிலும் மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையினாலும் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்ப டுவதாலும், அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory