» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாயமான மீனவர்களை மீட்க நீர்மூழ்கி வீரர்கள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கோரிக்கை

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 5:49:26 PM (IST)

மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 குமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 14 பேர் யேசுபாலன் என்பவரது படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் பலியானார்கள். 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர். பலியான மீனவர்களின் உடல்கள் உடனடியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

கடலில் மாயமான 9 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, படகு மீது கப்பல் மோதிய நேரத்தில் மீனவர்கள் 9 பேரும் படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்த 9 பேரும் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களால் மட்டுமே முடியும். எனவே அரசு நீர்மூழ்கி வீரர்களை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory