» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆக.11 ல் உள்ளூர் விடுமுறை : நெல்லைஆட்சியர் அறிவிப்பு

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 11:55:05 AM (IST)

வாவுபலி தினம் (ஆடி அமாவாசை) திருநாளை முன்னிட்டு வரும் 11 ம் தேதி உள்ளுர் விடுமுறை விடப்படுவதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம், ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினம் (ஆடி அமாவாசை) தினத்தை முன்னிட்டு 11.08.2018 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

11.08.2018 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2018 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (08.09.2018)அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.28.05.2018 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory