» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லாரிகள் வேலைநிறுத்தத்தால் பொருள்கள் தேக்கம்

சனி 21, ஜூலை 2018 10:19:06 AM (IST)

லாரிகள் வேலை நிறுத்தத்தால் கன்னியாகுமரியில் சேவைபணிகள் முடங்கின.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை நாகர்கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், சொந்த இடங்களிலும் நிறுத்தி வைத்திருந்தனர். 

இன்று  இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தால் குமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகப்படியாக ஏற்றிச் செல்லப்படும் தேங்காய், ரப்பர் ஷீட்கள், ரப்பர் பால், ரப்பர் மரங்கள், தும்பு, உப்பு போன்ற பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory